Wednesday, November 21, 2007

காற்றுக்கும் உண்டோ எல்லை

காற்றுக்கும் உண்டோ எல்லை
உண்டென்பது உறைப்பதற்கே ஏககாலம்
எல்லையில்லா சங்கதி எதுவுமில்லையோ!
எல்லைகள்தான் முக்கியமோ

மழலையின் தினவாழ்க்கை முதல்
முதிர்மங்கையின் மணவாழ்க்கை வரை
மாணவரின் மதிப்பீடு முதல் மாம்பழத்தின் தரம்வரையில்
எல்லைகள் தான் விதியோ

தானியங்கிப் பணயந்திரம், தருமநிறை கனத்தோடு
காத்திருக்கும் கனவான், தரம் மாறா தங்கம்
அதற்கும் மேலான பசுமைப்பயிர் என சம்பந்தமில்லா
கலவையிலும் எல்லையொன்றே பொது

எல்லைகள் எதற்கென்று கேள்வி தோன்றாத
நாள் இல்லை. எல்லையில்லா உலகத்தில்
இயற்கைக்கு மதிப்பேது என்பதனால்தான்
எல்லைகளோ யார் விதித்தது!