Sunday, October 25, 2009

சிந்தனை செய்திணை

சிந்தனை செய்திணை
மேலாண்மைக் கவிதைகள்

1
பாடங்களறிந்து செய்துவந்த திட்டங்கள் படிப்பறியா
பாமரனின் பகுத்தறிவு வழியெதிரே பாலைவனக்
கானல்போல் பார்வைக்குப் புலப்படினும் தெளிவேற்றும்
படிப்பென்று வழியறிதல் பண்பு

2
வெற்றியெங் கிருக்குமென தேடுமாந்தர் பலரிடையே
வெற்றியாவை உள்ளறிதல் பழகிடுவது பாங்காமே
தோல்விவெற்றி இடையெது வெனத்தேடி யறிந்தவர்
காண்பது நம் எதிர்பார்ப்பு

3
நாமறிந்த செய்கைகள் நன்றென்றே உணர்ந்தக்கால்
பிறர்செய்கை தவறென்று தோன்றுவது இயல்பு
நன்றுணர்ந்த நன்மக்கள் உரைப்பது வித்தியாசம்
வித்தியாசம் தான் தவறல்ல

4
உறவுகளுக் கடிப்படையாம் நம்பிக்கை தானென்று
பல்லறிஞர் கூற்றுக்கள் காலம்கடந்த உண்மை
தினவாழ்வில் நிறைவேற்றும் வழியெதுவென்றறியும்போ
தெளிவது தகர்ந்த பயங்களால்

5
தடையற்ற வெற்றிக்கு அடித்தளம் சேர்ந்துழைத்தல்
சேரும்குழுக்கள் சேரத்தடையெதுவெனில் தெளிவாம்
தகவல்பரி மாற்றமதன் அடிப்படை ஒருவழியன்று
இருவழி யாம் உண்மை

6
நம்மெண்ணம் பிறரறியும் வழியொன்று சொல்லல்தான்
மனப்பாங்கு செயல்படின் காண்கின்ற பலதோல்விக்
காரணங்கள் மாற்றம்தான் எவ்வழியோ எனவினவின்
விடை வினா ஆகுமே

7
தள்ளுதல் இழுத்தல் எதுவெளிது இயல்பியல்
என்றெண்ணின் நிற்க பிறரெண்ண்ம் மாற்றுங்கால்
செய்முயற்சி செலுத்தும் திசையறியும் கோட்பாடு
வேறில் என விழிமின்

8
வெற்றிக்கென் வழியெனின் உறவின்வலு வளர்மின்
நல்லுறவின் வழியெனின் புரிதல் புரிமின் அதன்தன்
அடிப்படை எதுவெனப் பின்வினவின் பொறுமையுடன்
கேட்டல் எனக் காண்க

9
எல்லாச் செய்கைக்கும் முன்வருமே சிந்தனை
என்றெண்ணம் வளர்க்கும் நன்மக்காள் பெரும்பாலும்
உந்துதல் வரும்போ உருவாகும் உணர்வின்
தன்னறியா வெளியீடே செயல்

10
குறிக்கோள்கள் நிறைவேறா நிலைமைக்கு காரணம்
பெருமளவு மனவழுத்தம் சிந்திப்பீர் வழிமுறைகள்
வேறல்ல சகமனிதர் தினப்படியாம் சமாளிக்கும்
திறன் பெருக முயல்

11
ஊக்கமது எவ்வாறென் அறிமுயற்சி முடிவில்லா
உள்ளென்றார் பல்லறிஞர் முழுமையன்று; சரிபாதி
தலைவன்தன் பங்காற்றல் அணுகுமுறை தேரும்கால்
தேவை தெளிந்து செய்க

12
பணிமுடிக்கும் ஊக்கம்தன் ஊற்றெதுவென் றாராயின்
ஊதியம் மட்டுமென உரைப்போர் விழிமின்
பணியாதென் தெளிவு பாராட்டு தரமறிதலாக
பற்பல வென்று அறிக

13
பணிசெய்யும் பாங்கதனை பாராட்டும் மேலாளர்
ஆராய்ந்து பார்த்தறிந்த பாடத்தில் முக்கியமாம்
முனைப்போடு செலவிடும் நேரம் எதிலெனில்
அளவீடு எதுவோ அதிலே

14
கருத்துப் பரிமாற்றச் சிக்கல்கள் உருவாகும்
காரணங்கள் தேடும்போ தெளிவாகும் முடிச்சுக்கள்
பார்க்கும் கோணம் மனப்பாங்கு தன்னிலைப்பாடென
தடையின் வடிவம் மூன்று

15
ஆதாயம் அதிகம்செய் ஆதாரம் ஆராயின்
வரவதனைப் பெருக்குதலே திட்ட முதற்கண்
ஆயின் சந்தைவளர்ச்சி குன்றியகால் செலவைக்
கண் வைத்தல் இன்றியமை

16
பணமொன்றே முக்கியமென் றோடிச்செல்
நன்மக்காள்பணத்தின் பொருளறிதல் முயல்வீர்
ஒவ்வொருவர்உழைப்பு நேரம் திறமை இவைமூன்றின்
கூட்டு மதிப்பாம் அது

17
மேலாண்மை நன்மைதர தலைவன் தன்பணிகளெவை
மாணாக்கன் கேட்டிட நல்லறிஞர் பதிலதுவாம்
காலத்தே வழியுரைத்தல் முன்னுவமை பாராட்டு
என மூன்றும் முதல்

18
பணிக்களத்தில் உற்பத்தி பெருக்கிடவே வழியேதென்
தரமுன் னேற்றத் தொடர் முயற்சி காரணமாம்
நற்பயிற்சி அதன்படிகள் தகவல் திறமை
மனப்பாங்கென மூன்று ஆகும்

19
தகவல் திறமை மனப்பாங்கென தனித்தனியே
ஆள்முயற்சி பயன்தாரா அவைசேர்ந்த வெளிப்பாடாம்
செய்பழக்கம் கண்டறிந்து மாற்றிவிடல் அறிந்து
ஆய்ந்து செயல் நற்பயனே

20
பணியாளர் செயல்பாடு பயனோடு அமைவதற்கு
பன்னிரண்டு வினாவின் அளவீடு அறிதலொடு
பணியாளர் பணிவிலகும் காரணத்தில் முதலெதுவென்
மேலாளர் தானென்பது உண்மை

21
விற்பனையின் விருத்திக்கு வித்தான வேறிலிகள்
எவையென்ற கேள்விக்கு விடையதுவாம் எளிதாமே
தேவையறிதல் ஏற்பத் தீர்வளித்தல்
எனஇரு வகை யாமே

22
தரமான பொருளதனை தடையின்றி உருவாக்க
முதலான அறிவெதுவோ நுகர்வோர் தேவையறிந்து
முழுதே நிறைவேற்றி அவர்தம் குறிப்பறிதல்
மட்டுமே தரமென் றறிக

23
தரமான உற்பத்தி தொடர்ந்திடத் தேவையாது
அடிப்படையாம் ஐவகைப் பழக்கங்கள் பிரித்தல்
துடைத்தல் வகைப்படுத்தல் பயனறிதல் பயிற்சி
யெனவும் அறிக முதற்கண்

24
பலமனிதர் ஒருசேர்ந்த நிறுவனமே தடையற்ற
வளர்ச்சியொடு நிலையாகச் செயலாற்ற பணியாதென்
தெளிவு பகிர்ந்தறிந்த வெற்றிநிலை தொடர்செயல்
அளவீடு எனமூன்றும் முதல்

25
ஊக்கமது தேர்ந்தறிந்த மேலாளர் நற்பழக்கம்
முடிவதனை முன்னிறுத்தும் தனிமனித குணம்நோக்கா
பாராட்டை முன்வைத்து பலவீனம் தேவையெனில்
பகுத்தாய்ந்து ஆளாளல் நலனே

26
குழுவாய்ச் சேர்ந்தோர் ஓடமதை செலுத்தும்போ
இலக்கறிந்த ஒருதலைவன் தேர்தல் நன்றே
தேர்ந்தக்கால் ஒப்பிலினும் அவன்சொல்
கேட்டல்கடன் என்று அறிக

27
பணியாளர் பிடிப்பேற்றும் வழிவகை பணியில்
தெளிவு அறிவு கருவி நல்வாய்ப்பு பாராட்டு
வளர்வழி சகாதரம் கருத்துரிமைதொலை
நோக் கென ஒன்பதாம்

28
பயனேற்றும் தலைமைப் பண்பெதுவென ஓர்ந்தக்கால்
சிலபணியில் ஒருதலைவர் சிலவற்றில் பலரென்று
சூழ்நிலையும் குறிக்கோளும் சேர்ந்த மைக்கும்
நிலை யறிதல் நலனே

29
வியாபாரம் வழிநடத்த முதல்தேவை எதுவென்று
நல்லறிஞர் ஆய்வனைத்தும் காட்டுவழி கண்டோமென்
தொலைநோக்கு நல்திட்டம் செயலாக்கத் திறனென
ஒன்றல்ல மூன்றாம் அறிக

30
பணித்தள வெற்றிக்கு அடிப்படையாம் கலாசாரம்
கலாசார அமைப்புக்கு அடிப்படையாம் நம்பிக்கை
நம்பிக்கை வளர்ப்புக்கு அடிப்படையாம் அனுபவங்கள்
என்றாய்ந்து செயலே தலைமை

31
சேவையதன் தரமறியும் நல்வினைகள் வகையாமே
அனுபவிப்போர் முடிவெடுப்போர் இருவரவர் தேவையறிதல்
பகுத்தாய்ந்து செயலாக்கிப்பின் காலத்தே மனமறிதல்
ஆராய்ந்து முன்னேற்றல் நலன்

32
நிறுவனத்தின் நலமதுவே விளைவுகளில் தானென்று
நம்பிவிட்ட மேலாளர் நாளடைவில் அறிகின்ற
அரும்பாடம் மூலம் தரமான செய்முறையில்
தான் என்பது உண்மை

33
செய்முறையின் பலமறிந்த மேலாளர் நற்பண்பாம்
பணியாளர் இலக்கதனை காலத்தே அறிவித்து
விளைவுகளோ டிசைவான செய்முறையும் அளவீடாய்
ஆக்கி விடல் அறிக

34
பங்காளர் மதிப்பதுவே பெருக்கிவிடும் நிறுவனத்தின்
மாண்பெதுவென் வினவிடில் தொலைநோக்குக் குறிக்கோள்கள்
திட்டமிடல் திறனாய்ந்து தேர்ந்த தலைமை
என மூன்றாம் கண்

35
நற்சூழல் தெளிநோக்கம் உணர்விலா தகவற்சேர்க்கை
முதற்கண் பாராட்டு பிரச்சினைன் மூலமறிதல்
தீர்வுதிரட்டல் செய்கையொப்பு காணல் எனவேழும்
தரமான மேலாண்மைப் பண்பாம்

36
படிப்பறிவால் செயல் நேர்த்தியடையா மேலாளர்
பட்டறிவால் காலத்தே மாறுதல் இயற்கை
மாற்றம்காணா நிலைவரின் அவர்பால் தலைமைப்
பொறுப்பு தவிர்த்தல் நலன்

37
விளைவுகளின் மூலமது அளவீடென் றறிந்தக்கால்
அளவீட்டின் ஆதாரவகை களெவை அறிவீர்
பணச்சார்பு வாடிக்கை செய்முறை வளர்ச்சியறிதல்
எனக் கோணங்கள் நான்கு

38
வியாபாரச் சூழ்நிலையில் ஏற்றவிறக்கம் இயல்பே
கணித்தே முன்னறிதல் நன்மையதாம் பங்காளர்
மதிப்பீட்டுச் சந்தையதன் தாக்கம் சொல்லியபடி
செயலாக்கச் சார்பு டைத்தே

39
பணியாளர் பணித்தலைவர் முதலாளி வித்தியாசம்
செயல்நலனிற் தெரியும் பகுத்தாயின் காரணம்
உரிமை உணர்வில்; உணர்ந்தாய்ந்த முதலாளி
அனைவருக்கும் தருவார் பங்கு

40
தனிமனிதச் செயலாக்கம் பணியதனின் அடிப்படையாம்
குழுவாய்ச் செயல்புரிதல் வெற்றியதன் வழியீடாம்
பலமனிதர் சேர்ந்துவிடல் மட்டுமே குழுவாகா
புரிதலொடு பகிர்தலே மாண்பு

41
கலாசார பரிமாணங்கள் நிறுவனத்தின் தூண்களாம்
கண்டறியும் முயற்சி சேர்ப்பிக்கும் முதலிடமே
பணியாளர் எண்ணங்கள் தயக்கமின்றி தெரியும்
தெரிவிக்கும் பணிச் சூழல்

42
பெருமிதமாம் பணிச்சூழல் உருவாக்கும் பொறுப்பாமே
பணியாளர் தேரும் செய்முறையில்; பலமனிதர்
கருத்தின்றி அளவீடற்ற முடிவாகும்போ வருமே
பணியாளர் விட்டோடும் நிலைமை

43
பணியாளர் நிறுவனத்தை விட்டோடும் நிலைமையது
இயல்பு; தடுத்தாளும் வழியறிவீர் கருத்துக்
கேட்டறிதல் தேவையறிதல் எண்ணமறிதல் வாய்ப்பு
உருவாக் கிடலென நாலாமே

44
பணியாளர் தேர்கின்ற செய்முறையின் வலுசேர்
வழியாயின் தேவையில் தகவலறிதலில் எண்சார்
எண்ணமறிதலில் திறனறியும் முறையில் வாய்ப்பில்
தேவை தெளிவு திடம்


45
பணியாளர் ஊக்கமது நிறுவனத்தின் தேவைசாரா
நிலைவரும்போ ஊக்கமாற்றம் முயற்சித்தல் இலின்
காலத்தே வெளியேற்ற வகைசெய்தல் நலனே
என்பநல் லறிஞர் கருத்து

46
திட்டங்கள் வகையறியின் தொலையிடை குறுவென
காலத்தே மூவகையாம் குறிதெளிந்த நற்தலைவர்
தொலைதுவங்கி இடைபிரித்து செயலாக்க குறுதிட்டம்
அமைத்தல் பயனென் றறிவர்

47
பங்காளர் மதிப்பீட்டை பெருக்குதலே குறியொன்றாய்
செயல்படுதல் நிறுவனத்தின் நெடுங்கால நலனுக்கு
அடிப்படையென் றறிந்தோர் எதிர்பார்ப்பைக் குறைத்து
செயலதிகம் காண்பித்தல் உண்மை

48
எதிர்பார்ப்பு தெளிவித்தல் எண்ணங்கள் அறிந்திடுதல்
சமயத்தே வாய்ப்பளித்தல் பயிற்சியதை ஊக்குவித்தல்
எண்சார் முடிவெடுத்தல் பருவத்தே வளர்வித்தலென
நல்மே லாண்மை அறுபடியாம்

49
முடிவுகளை மேலாக்க மிகத்தேவை தொடர்பயிற்சி
பயிற்சியளிப் பயனதனை அளந்திடல் முக்கியமாம்
கருத்து கல்வி குணமாற்றம் நற்பலனென
அளவீடு நால் நிலையாம்

50
விற்பனையை பெருக்கிடவே வழிதேடும் வல்லுனரே
முடிவெடுக்கும் பலமனிதர் முதலுணர்வது வலியன்றோ
வலியறிந்து விளைவுணர்த்தி விரும்பும் தீர்வறிந்து
அதுமட்டும் அளித்தல் நன்று

51
பழுதான யந்திரத்தை புதுப்பிக்கும் பொறியாளர்
முதற்செய்கை காரண மறிதல் கலாசாரச்
சிக்கலதை விடுவிக்கும் மேலாளர் துவக்கமும்
வேறில்லை யென்று அறிக

52
கலாசாரச் சிக்கலுக்கு நிலையான தீர்வுதேடின்
மக்கள்சார் வேறிலிகள் நன்றாய்ந்த தீர்வளிக்கும்
நன்மேலாளர் அறிவது அத்தீர்வினும் பெரிது
அறிவிக்கும் சமயமும் பாங்கும்

53
பிரச்சினைகளின் தீர்வுகாணும் நல்முயற்சி தானாய்ந்தால்
தீர்வுதிரட்டல் வகைப்படுத்தல் விளைவறிதல் அறிந்தபின்
தீர்வுதெளிதல் செயல்படுத்தல் அதன்பின் தீர்வின் தரமாய்தல்
எனத் திட்டமிடுதல் பாங்கு

54
பணித்தள வெற்றிக்கு பாங்கான பணிசாராக் காரணங்கள்
பங்குச்சந்தையின் பரிமாணங்கள் மட்டுமின்றி மேலும்பலவே
சமுதாய முன்னேற்றம் சுற்றுச்சூழ் மாசுதடுத்தல் சிறுவர்காள்
பணிதடுத்து கல்வியேற்றல் எனவாம்

55
காலத்தை ஆள்தல் அவசியமென்று ஆர்ப்பரிக்கும்
மானிடரே காலமது மாறிலியாம் மேலாளவாய்ப்பெங்கே
நம்செய்கைத் தரமும் அமைப்பும் தருணமும்
சரி யாக்கல் நன்றே

56
தரமான செய்கைக்கு வெகுதேவை தகுகாலம்
சொல்கின்ற மேலாளர் அவசியம் அறிவாரே
காலஅளவினும் முக்கியமாம் செய்தருணம் திறன்
செய்கை அமைப்பென்று அறிக

57
நிறுவனத்தின் உறுதிக்கு மிகத்தேவை நம்பிக்கை
தவறுகளால் குலைவதில்லை; குலைத்துவிடும்
காலத்தெ தெரிவிக்கா செய்தியது; வளர்த்திடுவீர்
பணியாளர் உண்மை சொற்திறன்

58
தெளிவான குறிக்கோள் விரிவாய் பணித்திட்டம்
அறிவான பணியாளர் அதிகமாய் பணவிருப்பு
ஆதரவாய் சந்தையுமே அத்தனையும் விழலாக்கும்
காலத்தே முடிவெடுக்கா மேலாளர்

59
வளர்தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதல்வித்து
உரிமையை மேலாண்மையின் வேறுபடுத்தும் முதலாளி
உள்ளில்லாத் திறமையை அனுபவத்தை தேவையறிந்து
தருணத்தே கொணர்தல் நலன்

60
தலைமையில் உள்ளில்லாத் திறமையை வெளியிருந்து
கொணரும்போ தலைவரின் கற்கும்பண்பு உள்ஊக்கம்
கலாசார ஒற்றுமை நிறுவன வளர்ச்சியில் ஈடுபாடு
சமச்சீராய் ஆராய்தல் தேவை
61
செய்முறை தெரிந்தாலும் காரணமறியாச் செய்கைகள்
முழுமையாய்ப் பலன் தாரா; உணர்ந்தறிந்த மேலாளர்
செய்முறையைப் புகுத்துவது காரணமும் குறிக்கோளும்
தெளிவித்த பின்னரே என்றறிக