காற்றுக்கும் உண்டோ எல்லைஉண்டென்பது உறைப்பதற்கே ஏககாலம்எல்லையில்லா சங்கதி எதுவுமில்லையோ!எல்லைகள்தான் முக்கியமோ
மழலையின் தினவாழ்க்கை முதல்முதிர்மங்கையின் மணவாழ்க்கை வரைமாணவரின் மதிப்பீடு மாம்பழத்தின் தரம்வரையில்எல்லைகள் தான் விதியோ
தானியங்கிப் பணயந்திரம், தருமநிறை கனத்தோடுகாத்திருக்கும் கனவான், தரம் மாறா தங்கம்அதற்கும் மேலான பசுமைப்பயிர் என சம்பந்தமில்லாகலவையிலும் எல்லையொன்றே பொது
எல்லைகள் எதற்கென்று கேள்வி தோன்றாதநாள் இல்லை.
எல்லையில்லா உலகத்தில்இயற்கைக்கு மதிப்பேது ? யார் விதித்தது!
எல்லையில்லாதது எதுவென்று ஏகமான யோசனைக்குப்பின்சட்டென்று தோன்றியதுஆச்சரியம்தான்; பெரியப்பாகேளென்று கூறி பிரபந்தத்தின் பலபாசுரங்கள்பாடிய ஒன்றேமுக்கால் வயது மகனின் ஆனந்தம்
பாடியவன் மகனென்றாலும் படிப்பித்தவன்தம்பியானதால்; கேட்கப்போகும் பாட்டியின்முகத்தில் தோன்றும் உணர்வுகளை கற்பனைசெய்ததால் எல்லையே இல்லாது போனது