நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
உலகத்தை உஉற்றுப்பாரும்
பாதிக்குமேல் இல்லையிந்த உரிமை
‘குடி'மகர்கள் குறைந்துபோய்
குடியுரிமை உயர்ந்ததாய்
கொடியுயரப் புகழ்வளர
வல்லதரசு இக்குடியரசென
ஊர்வளர ஓட்டுயர
நாட்டுணர்ச்சி நாணயமாய்
நன்மைக்கே தலைவர்களாய்
நீதிநிலைக்க எளிதாய்க்கிடைக்க
வறுமைவிலக வளமைபெருக
குற்றம்குறைய செறிவுநிறைய
சூழலனைத்தும் பசுமைபொழிய
பணமன்றி குணமேகுறியாய்
நமதாட்சி நமதென்று
குடியெல்லாம் நன்குணர்ந்து
பார்வியக்க படித்தறிய
குடியரசு போற்றிடுவோம்
குடியரசுதின நல்வாழ்த்துக்கள்!!