Monday, July 20, 2009

இன்று புதிதாய்ப் பிறந்தோம்...

பள்ளிக்குச் சென்ற காலத்தில் கி.கஸ்தூரிரங்கனின் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" தொடர் தினமணி கதிரில் வரும். தேடிப்போய்ப் படிப்பேன்.

திடீரென்று அந்தத் தலைப்பு ஒரு புதிய பரிமாணம் காட்டியது. நினைக்கத் தெரிந்த, பழகிய மனங்களுக்கு மறப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் பரிமாணம். ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய - 12 வயதில் - முதல் புத்தகம் "அறிந்த்தனின்றும் விடுதலை" தலைப்பிலேயே செய்தி சொல்கிறது.

நாம் நமது நினைவுகளுக்கு,அதனால் உணர்வுகளுக்கு அடிமையாய்த்தானே இருக்கிறோம். கடந்தகாலத் தாக்கம் இல்லாமல் எதையும் யாரையும் பார்க்க பழக முடியாதா?

இன்று புதிதாய்ப் பிறந்து பார்ப்போமே!