காற்றுக்கும் உண்டோ எல்லை
உண்டென்பது உறைப்பதற்கே ஏககாலம்
எல்லையில்லா சங்கதி எதுவுமில்லையோ!
எல்லைகள்தான் முக்கியமோ
மழலையின் தினவாழ்க்கை முதல்
முதிர்மங்கையின் மணவாழ்க்கை வரை
மாணவரின் மதிப்பீடு முதல் மாம்பழத்தின் தரம்வரையில்
எல்லைகள் தான் விதியோ
தானியங்கிப் பணயந்திரம், தருமநிறை கனத்தோடு
காத்திருக்கும் கனவான், தரம் மாறா தங்கம்
அதற்கும் மேலான பசுமைப்பயிர் என சம்பந்தமில்லா
கலவையிலும் எல்லையொன்றே பொது
எல்லைகள் எதற்கென்று கேள்வி தோன்றாத
நாள் இல்லை. எல்லையில்லா உலகத்தில்
இயற்கைக்கு மதிப்பேது என்பதனால்தான்
எல்லைகளோ யார் விதித்தது!
விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது உணர்வுகளும் அவற்றை மனிதன் கையாளும் விதமும். இந்த வலைப்பதிவின் ஒரே நோக்கம், அவ்வுணர்வுகளை அழகான ஓசையாக்கி வெளிப்படுத்துவதுதான்...
Wednesday, November 21, 2007
Monday, November 19, 2007
இணையத்தில் நட்பு!
நரைகூடிக் கிழப்பருவமெய்தினும் நாள்பட்ட நட்பு
மறுபடித் தளிரும்போது அளவிலா ஆனந்தம்
எண்ணிப்பார்த்தால் வினோதமான உணர்வுகள்
அமைந்ததும் தொடர்ந்ததும் விட்டதும் நடந்ததே
தெரியவில்லை; ஆரியக்கூத்து முடிந்து காரியத்தில்
கண்வைக்கும் காலங்கள் அனைவருக்கும் விதியோ!
மாறும் காலங்கள் தோன்றும் புதிய உறவுகள்
நட்பில் உருவாகும் தூரங்கள் நிஜத்திலும் மனத்திலும்!
ஏற்படுதல் தவறன்றி வெறும் இயற்கைதானோ....
நட்பென்பது பகிர்தலா புரிதலா விட்டுக்கொடுத்தலா;
எதுவாயினும் மனதில் இறுக்கமில்லா நிலையென்பது
உண்மை; அவ்வப்போ தோன்றும் இறுக்கமும் மாயையன்றோ!
இலக்கின்றித் தோன்றும் நட்புக்கள் காலத்தே
பாலங்களாய் ஏணிகளாய் வளர்ச்சிக்கு வித்தாவது
பெருமைதான்; அதுதான் இயல்பான வடிவமைப்போ
நட்புக்கள் வளர்ச்சிக்கு வித்தாவது போய்
வளர்ச்சியின் தேவையே நாள்பட்ட நட்புக்களை
மலரச் செய்வது இணைய உலகத்தின் விந்தை!
பருவங்கள் எதுவாயினும் நட்பில் உணர்வுக்குக்
குறையில்லை; நேரமும் வாய்ப்பும் இன்றித் தற்காலிகமாய்
செயலிழக்கும் நட்புகளுக்கு இணையம் ஒரு சஞ்சீவிதான்!

என் முதல் இணையத் தமிழ் முயற்சி
உதவித்தகவல்கள் மூலம் எமது முதல் இணையத் தமிழ் முயற்சியை சாத்தியப் படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!
தொடக்கமாய், ஒரு சிறிய கவிதை முயற்சி...
நாமறிந்த செய்கைகள் நன்றென்று உணர்ந்தக்கால்
பிறர்செய்கை தவறென்று தோன்றுதல் இயல்பு
நன்குணர்ந்த நன்மக்கள் உரைப்பது வித்தியாசம்
வித்தியாசம் தான் தவறல்ல!
சிந்தனை செய்திணை எனும் எமது மேலாண்மைக் கவிதைகளின் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை.இவை கிட்டத்தட்ட நேரிசை வெண்பா வடிவில் எழுத முயற்சிக்கப் பட்டவை.
ஆர்வமிருந்தால் எழுதுங்கள், அனுப்பிவைக்கிறேன். முழுவதையும் இந்த வலைப்பதிவில் பதிப்பிக்க உத்தேசம் தான்.

Subscribe to:
Posts (Atom)