உணர்வுகளுக்கு ஓசையுண்டோ
எனக்குள் கேட்டேன்
ஓங்காரச் சத்தத்துடன் பதில்
வந்தது!
கொழுந்தெரியும் தீபோல கோபமாகட்டும்
நீறுபூத்த நெருப்பைப்போல்
எரிச்சலாகட்டும்
மகிழ்ச்சி விசனம் பெருமை
நகைச்சுவையென்று
மனதில் சத்தமெழுப்பாதவை
எவையுமில்லை!
காதோட வந்த செய்தி
காத்தோட போட்டுமின்னு
விட்டிடத்தான் முடியலையே
உணர்வுகள் சூடேற்றுதே!
உணர்வுகளே வாழ்க்கையென்பேன்
உணர்வின்றி மனமேது
அறிதலும் செய்தலும் மட்டுமே
அறிவாலே
வாழ்வதும் மகிழ்வதும் உணர்வாலே