
முதல்மகனின் திருமணமாம் முனைப்போடு செல்கின்றோம்
எத்தனையோ ஞாபகங்கள்...மணியண்ணா மணம் முதலே!
முன்பெல்லாம் பஸ்ஸின்மேல், பெருங்கூட்டம் சேர்ந்திடுமே
இப்போது குடும்பத்தில் ஒரிருவர் முன்பதிவு ரயில்மட்டும்
சூழ்நிலைகள் மாறினாலும் உணர்வுகளில் மாற்றமில்லை
வெகுநாட்கள் முன்னதாக வந்திருந்து நடத்துவதில்லை
அந்நாளே வந்தாலும் அரைமணியில் அமர்க்களம்தான்
எல்லாமே வேகம்தான் மனதளவில் உலகமடா!
சங்கடமோ சலசலப்போ சகோதரரும் சங்கமமாய்
சேர்ந்திருந்து பரிமளிக்கும் நல்லதொரு நிகழ்ச்சியாமோ!
மாப்பிள்ளையோ பிள்ளையாகி எங்களையே வரவேற்கும்
பெருமையது மாற்றத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சிதான்!
தாத்தாச்சார் திருமணத்தில் கிண்டல்தான் கேலிதான்
இப்போதும் மாற்றமில்லை மாற்றமென்றும் தேவையில்லை
கோடிமணம் செய்துவைத்த பெரியவரின் பரம்பரையில்
மற்றொருபெண் வருகின்றாள் எதிர்பார்ப்பும் ஏகம்தான்.
மாற்றமென்ன வருமென்று காத்திருந்து பார்த்திடுவோம்
நாத்தனாராய் அய்சுவரியா மாறுவதைப்பார்த்திருப்போம்
பூமிபோலப் பொறுமையென்று சொல்லித்தான் கேட்டிருக்கோம்
பார்க்கணும்போல் இருந்தாலே பாத்திடுங்கோ மன்னியைத்தான்
அண்ணன்மார் அறுவரிலே ஆண்மகவு இவர்க்குமட்டும்
எத்தனையோ வகைகளிலே வித்தியாசம் இவரிடத்தில்
எதிர்பார்ப்பு ஏக்கமோடு ஏகமாய் மகிழ்ச்சியோடும்; அவ்வப்போ
கடுமையாகப்பேசினாலும் கண்ணியத்தில் குறைவில்லை!
தலைமுறையின் தலைப்பிள்ளை ஆகப்போகும் மாப்பிள்ளை
சிறுவயதுக் கிறுக்கல் கவிஞரின் சீரான உருமாற்றம்
வெகுநாட்கள் பார்த்திருந்தோம் மிதமான முன்னேற்றம்
வியப்புக்கும் குறைவில்லை, அமைதிக்கும் அப்படியே
பட்டத்து மகனுக்கு வரப்போகும் பட்டம்மாள்
முகமெல்லாம் சிரிப்போடு முனைப்போடும் வந்தாளே
அக்கறைக்குக் குறைவில்லை இந்தசர்க்கரையின் குணத்தினிலே
வேலையிலே தேர்ந்தவளோ வாழ்க்கையிலும் சேர்ந்தாளே
விக்ருதியின் கார்த்திகையில் வியக்கவொரு திருமணமாம்
வக்கிரங்கள் வழக்கொழிந்து வாழ்க்கையது தெளிந்திடவே
அகத்தில் உக்கிரமாய் எண்ணங்கள் இனிமையினில் மறைந்திடவே
கண்மணிகள் எம்மகற்கு வாழ்த்துக்கள் சேர்க்கவந்தோம்
தந்தையவன் சிற்றப்பன் தன்மையதை மனதில்கொண்டு
சிற்றன்னை சிறப்பான பொறுமையோடும் கருணையோடும்
கைகோர்த்து வாழ்ந்திடுங்க காலமதை வென்றிடுங்க
அத்தையோடு சிற்றப்பரும் பரிவாரம் புடைசூழ வாழ்த்து சொல்றோம்!
வாழ்க! வளர்க!
கோபாலதேசிகன் குடும்பத்தார்