Tuesday, November 3, 2009

கட்டுரை: வேடிக்கை மனிதராய் வாழ்க்கை!

தேடிச் சோறு நிதந்தின்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, வேடிக்கை மனிதராய் வாழ்வது நமக்கு விதியாகி விட்டது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன புதிதாய்ச் செய்தோம் என்ற கேள்விக்கு விடை அரிதாய் இருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்லும் restlessness அதிகமாகிக் கொண்டே போகிறது.

சராசரியாய் 70 வருடம் வாழும் ஒருவர் மூன்றில் ஒரு பகுதி தூங்குகிறார். மற்றொன்று தினசரிக்கடன்களிலும் தேடிச்சோறு தின்பதிலும் செலவாகிறது. மீதமிருக்கும் 25 வருடங்களில் பெருமளவு நம் கட்டுப்பாட்டிலில்லா குழந்தைப் பருவம் பத்தை சாப்பிட்டு விடுகிறது.

சாதனைக்கு, பிறருக்குப் பயன்பட, உருப்படியாய் வாழ இருப்பது கிட்டத்தட்ட 5000 நாட்கள் தான். தெரிந்து தான் பாரதி பாடினானோ?

சிந்தித்துப் பார்க்கும்போது சாதனையாளர்களும் மனிதர்களின் போக்கை பெருமளவு மாற்றியவர்களும் அதை அடைய பெரிதாய்க் காலம் எடுத்துக்கொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. It is not about time, but the timing.

தெளிவான இலக்கும், துணிவான முயற்சியும், பதட்டமில்லாத அணுகுமுறையும், வழியும் முக்கியம் இலக்கை அடைதலும் முக்கியம் எனும் மனப்பாங்கு - இவையெல்லாம் அமைதல் யார்கையில்?