விடலைப்பருவத்தோடு வாழ்க்கைக்கனவுகளும் உடன்சுமந்து
பல்சுவைத் தருணங்கள் சேர்ந்தே அனுபவிக்க
சந்தித்தோம் கல்லூரியில். ஓடிவிட்டன ஆண்டுகள் இருபது!
‘ஒருவாரம் மூடிய கல்லூரி உயிரை உருக்கிய’ தொடக்கங்கள்
தயிர்சாதத் தவிப்பை பசுவாங்கியாவது போக்கிவிடலாமென்ற அவசர ஆசை
பேருந்தின் மேலே பயணம், உலகையே ஆள்வது போலெண்ணம்
அளவிலாத பேச்சு, பாட்டு நாடகம், கற்பனை வெளிப்பாட்டில் பலமுயற்சி
ராம்ஜியும் கோபாலும் ‘தாதூ’வும் சேர்ந்தளித்த தேயிலை ஊக்கம்
பண்டிட்ஜியின் சூடான சிங்காடா குலாப் ஜாமூன்
மாலைக் காற்றில் ஆனந்தமான “ஹவா பாஜி” ஷ்யாமில்
அனுபவித்தபின் எக்களிப்போடு சொன்ன “பாத் மே தேதேங்கெ”
வாழ்வே வீணாகுமோ என்றிருந்த கணங்களை
வெற்றியின் அடித்தளமாய் ஆக்கிய நட்புக்கள்
பொறியியற் பாடம் குறிக்கோளாய் இருந்தபோதும்
முக்கியக் கைசேர்ப்பு வாழ்க்கைப் பாடமாயிற்று
நகமும் சதையுமாய் பல்லுடல் ஓருயிராய்
பலஜன்ம பந்தம்போல் கடந்துவிட்ட நான்காண்டு
பறந்துபோன பதினாறு வருடத்தில் “எங்கிருக்கான் தெரியலையே,
டச்சே இல்லேப்பா” என்று ஆகிவிட்ட கூத்தெப்படி!
பல்லாண்டு இடைவெளியில் பார்க்கச்சென்ற நண்பனின் சிறுகுழவி
காத்திருந்தாள் ஆவலாய் அப்பாவின் “க்ளாஸ்மேட்” யாரென்று!
இவ்வளவு பெரியவரா உன் “க்ளாஸ்மேட்”, அவளுக்கு ஆச்சரியம்
பதினாறு வருடங்கள் பின்சென்ற என்னுணர்வை விவரிக்க முடியலையே!
ஆரியக்கூத்து முடிந்துபோய் காரியத்தில் கண்வைக்கும் காலங்கள்
வந்தபின் யாரைக் குறைசொல்வது? சொல்லத்தான் தேவையென்ன!
பொறுப்புக்கள் பலவிருந்தும் இல்லாமல் எதிர்கால எதிர்பார்ப்பு
ஏகமாய் இருந்தாலும் களிப்பான அக்காலம் மறுபடிதான் கிடைத்திடுமோ!
அப்படியே கிடைக்காது அனைவருக்கும் தெரிந்ததுதான், தேவையில்லை.
கடந்ததற்க்கும் நடப்பதற்கும் பாலம்போட முயலலாமே
நிகழும்போது அனுபவத்தே பின்னர் அசைபோடுவதில்
ஆனந்தம் அதிகமன்றோ! முயற்சிப்போமா?
விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது உணர்வுகளும் அவற்றை மனிதன் கையாளும் விதமும். இந்த வலைப்பதிவின் ஒரே நோக்கம், அவ்வுணர்வுகளை அழகான ஓசையாக்கி வெளிப்படுத்துவதுதான்...
Sunday, February 17, 2008
தம்பி சேஷாத்ரீ
நால்வரிலே சிறியவனாய் இருந்தாலும்
நடத்தையிலே பெரியவனாய் இருப்பதுண்மை
அருகாமை வெகுதூரம் இருப்பது எங்காயினும்
அருமைதான் உணர்வுகளை அடிக்கடி பரிமாறும் தன்மை
ஆத்திரமோ அன்பணைப்போ உடனடி வெளிப்பாடு
கோபத்தால் சாதிப்பார் முடியலையா உடனிறங்கி முடித்திடுவார்
அவசரம் அவரோடு உடன்பிறந்த கவசம்குண்டலம்
ஆழமது அடிப்பொதிந்த அவரது நல்லெண்ணம்
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது பொதுமொழி
உன்போன்ற தம்பியுடையான் என்பதுதான் பொருத்தம்
தகப்பனாய் சிற்றப்பனாய் உன் பரிமாணங்கள் அற்புதம்
தன்னிச்சையாய் வெளிப்படும் பிறர்வளர்ச்சியில் மகிழ்ச்சி ஆச்சரியம்
உறவுவளர்ப்பில் நீகாட்டும் முயற்சியும் திறனும்
எமக்கு உதாரணம் தெளிகிறோம் உம்போல் உயர
முயல்கிறோம்; உம்தமயனாய் இருப்பது எமக்குப் பெருமை
அதைக் காத்திடுக வளர்த்திடுக

பெரியம்மாவுக்கு வயது 78!
ஏன் எம் வாழ்வில் இத்தனை வலியோ
உடலால் படுதல் பழகிவிட்ட போதிலும்
மனதால் இத்தனை தேவைதானோ?
ஏன் எமக்கிந்த வேதனை விதியாய்!
அகவை அதிகமானபின் தேவைகள் குறைதல்
விதிதானே, தேவையும் எதிர்பார்ப்பும் ஒன்றாமோ
அதுமட்டும் ஏன் குறைவதில்லை ஆயின்
எதிர்பார்ப்பு உண்மையாதல் அவசியமோ?
தலைமுறைகள் தாண்டிய போதிலும்
புரிதல் ஏனில்லை புரியலையே
பிறர்சார்ந்து வாழ்நிலைமை வந்தபின்
இருத்தலும் போதலும் ஏனில்லை எம்கையில்!
மனதைப்பிழியும் எண்ணங்கள் நொடிகளை
யுகமாக்கும் கோலம் தாங்கலையே!
வாழ்க்கை என்பது முழுவதும் மனதில்தானோ
பதில் தேடித்தேடி மிஞ்சியது அலுப்புத்தான்.
எண்ணத்தில் ஏக்கமோ ஏமாற்றமோ இறுமாப்போ
எதுவாயினும் என் எதிர்பார்ப்பு சார்ந்ததன்றோ!
எண்ணமே வாழ்க்கையாயின் வாழ்வு சுலபம்தான்
அதை மேலாளல் எளிதாமோ?
சிலரைப் பார்க்கும்போது மட்டும் மனது சிரிக்கிறதே
அவர்தம் நற்குணம் மட்டுமே நமக்குத் தெரிவதாலோ?
நிம்மதியும் சந்தோஷமும் அக்கணத்தில் நம் தேர்வன்றோ
அறிவுக்குத் தெரிவது மனதுக்கு ஏன் தெரிவதில்லை.
மனதில் தோன்றும் எண்ணம் அகற்றல் முடியாது
வேண்டாத எண்ணங்களை வேண்டுவனவாய் மாற்றல் சாத்தியம்!
வலிமையின் அடிப்படையாம் இவ்வுண்மை செயல்படுத்த
வயதொன்றும் தடையில்லை, மனப்பாங்கே!
அன்பு அனுசரணை பிறர்தேவை தீர்த்தல் இவையே
இலக்கணமாய் எழுபத்துஏழு வருடங்கள் வாழ்ந்துவிட்டபின்
வலிகளை மறந்து வாழ்வது உனக்கா கடினம்?
வாழ்ந்து காட்ட முயல்வாயா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Subscribe to:
Posts (Atom)