காலங்கள் பலசென்ற பின்பார்த்த போட்டோ
தகர்த்தது ஆனந்தமாய் வாழ்ந்த நினைவுகளின் பூட்டோ
கனவின்றி வாழ்வதுவோ சாத்தியம் இல்லை
அர்த்தமற்ற எண்ணங்களுக்கு தேவையேது எல்லை
நேற்றோடு பாலமான இவைதான் நம்மை இயந்திரமாக்காத 'தாட்' டோ
நிலைமாறாது காலத்தே அசையாத விளக்குக் கம்பும்
அதனடியில் நின்று அசைபோட்ட ஊர்வம்பும்
வெட்டிப்பேச்சென்று விலக்கிவிட முடியாத பயிற்சியாய் போனது
இயல்பும் கற்பனையும் ஒருபடப் பேசும் திறன் வளர்ந்தானது
இருபதாண்டு கடந்து அதுதான் சொறிடுகிறதென்றால் எந்தவூர் நம்பும்
காலாற நடந்துசென்று மூன்றாண்டு கடத்திய கல்லூரியோ
படிப்பன்றிப் பல அனுபவம் வாரியளித்த பாரியோ
ஏட்டுக் கல்வியில் மதிப்பெண் பெறாதவன் மோசமென எவன் சொன்னது
வேதியியல் படிக்காது பார்த்தபல சினிமா கதைசொல்லும் திறன் வளர்த்தது
இன்றவன் ஆசிரியர் பலர் சென்று பார்த்து சிலாகிக்கும் ஹீரோ