Sunday, February 17, 2008

பெரியம்மாவுக்கு வயது 78!

ஏன் எம் வாழ்வில் இத்தனை வலியோ
உடலால் படுதல் பழகிவிட்ட போதிலும்
மனதால் இத்தனை தேவைதானோ?
ஏன் எமக்கிந்த வேதனை விதியாய்!

அகவை அதிகமானபின் தேவைகள் குறைதல்
விதிதானே, தேவையும் எதிர்பார்ப்பும் ஒன்றாமோ
அதுமட்டும் ஏன் குறைவதில்லை ஆயின்
எதிர்பார்ப்பு உண்மையாதல் அவசியமோ?

தலைமுறைகள் தாண்டிய போதிலும்
புரிதல் ஏனில்லை புரியலையே
பிறர்சார்ந்து வாழ்நிலைமை வந்தபின்
இருத்தலும் போதலும் ஏனில்லை எம்கையில்!

மனதைப்பிழியும் எண்ணங்கள் நொடிகளை
யுகமாக்கும் கோலம் தாங்கலையே!
வாழ்க்கை என்பது முழுவதும் மனதில்தானோ
பதில் தேடித்தேடி மிஞ்சியது அலுப்புத்தான்.

எண்ணத்தில் ஏக்கமோ ஏமாற்றமோ இறுமாப்போ
எதுவாயினும் என் எதிர்பார்ப்பு சார்ந்ததன்றோ!
எண்ணமே வாழ்க்கையாயின் வாழ்வு சுலபம்தான்
அதை மேலாளல் எளிதாமோ?

சிலரைப் பார்க்கும்போது மட்டும் மனது சிரிக்கிறதே
அவர்தம் நற்குணம் மட்டுமே நமக்குத் தெரிவதாலோ?
நிம்மதியும் சந்தோஷமும் அக்கணத்தில் நம் தேர்வன்றோ
அறிவுக்குத் தெரிவது மனதுக்கு ஏன் தெரிவதில்லை.

மனதில் தோன்றும் எண்ணம் அகற்றல் முடியாது
வேண்டாத எண்ணங்களை வேண்டுவனவாய் மாற்றல் சாத்தியம்!
வலிமையின் அடிப்படையாம் இவ்வுண்மை செயல்படுத்த
வயதொன்றும் தடையில்லை, மனப்பாங்கே!

அன்பு அனுசரணை பிறர்தேவை தீர்த்தல் இவையே
இலக்கணமாய் எழுபத்துஏழு வருடங்கள் வாழ்ந்துவிட்டபின்
வலிகளை மறந்து வாழ்வது உனக்கா கடினம்?
வாழ்ந்து காட்ட முயல்வாயா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

2 comments:

Viji said...

Amazing....I wonder even if patti cud express whats running in her mind this gud. Summva solra "pattiku chella payyannu"...

Desikamani said...

Thanks, Viji.
You express better when you can feel and connect.