Saturday, February 2, 2008

முதல்வனுக்கு வயது இரண்டா?

முதல்வருடம் முடியுமுன்னே இன்னொரு முதல்வனுக்கு
அள்ளிக்கொடுத்தான் உற்சாகம், பிறந்தது கவிதை ஆர்வம்!
தமையனுக்களித்ததை தகப்பனுக்களிக்காது முடியுமா?
சற்றே தள்ளிச்செய்தாலும், தனிச்சிறப்போடு
தூண்டிவிட்டான் பிரபந்தத்தில் புலமை, ஈடுபாடு!

அருகில்போய் தூக்க முயன்றால் அழுகையோ முகம்சுண்டலோ
தள்ளி நின்று எய்திடும் அப்புன்னகையில் அத்தை மனம் உருகியதே!
வாவென்றும் போவென்றும் நொடிக்கொரு ஆணையிடல்
கண்படுமோவென்று அஞ்சிவிடும் அற்புதப்பேச்சு வெகுவிரைவாய்
ஐந்துபேத்திகளின் ஆனந்தம் சுலபமாய் மறந்துபோனாள் பாட்டி!

சிறுபிள்ளைத்தனமாய் பெரியோரின் ஆணவமும் கோபங்களும்
மறையச்செய்தல் மழலையின் தன்மைதான்; இவன்கண் தனிச்சிறப்பு!
காரணமில்லா அழுகை எங்கிருந்தோ தோன்றிவிடும் பிடிவாதம்
சட்டென்று குறுநகை தினமொரு புதுப்பேச்சு எதிர்பாராச் சிறுநோய்களென
விதவிதமாய் அனுபவங்கள்; அன்னைக்கும் புரிபட்டது யதார்த்தம்!

வாஞ்சை விளையாட்டு கரிசனம் கண்ணில் தெரியும் வியப்பென
குழந்தைகளாம் தமக்கயருக்கும் அள்ளித்தந்த உணர்வுகளனைத்தும் ஆனந்தம்!
இரண்டு வளர்த்த எக்காளம், மேலும் மூன்று வளரப்பார்த்த அனுபவ ஆணவம்
தெளிவாய் மொழிபேசும் பெரியம்மாவுக்கு தன் தகப்பனுக்கே புத்திகாட்ட
உருவாக்கிய எத்தனை சந்தர்ப்பங்கள், நகைச்சுவை, அற்புதம்!

அன்னையா தந்தையா எவரைக்கொண்டாய் என்றகேள்விக்கு
அறிவும் உறவும் ஒருசார் நடுநிலையாய் பதிலிவனோ, ஆமென்பேன்!
அருகில்வரத் தயக்கம் தெரிந்தாலும், அகத்தை முகத்தில் முறுவலாய்,
தொலைபேசியில் அன்புவார்த்தைகளாய், அடிக்கடி அக்காக்களை எண்ணுவதாய்,
உருக்கி உருட்டும் ஆழ்வாரின் வார்த்தைகளாய், வெளிப்பாடு பலவிதமாய்!

முதல்வனுக்கு வயது இரண்டா... இரண்டுதானா?

No comments: