Wednesday, August 5, 2009

ஆயின ஆண்டுகள் ஒன்பது!

அப்பா என்றொரு சகாப்தம் முடிந்து ஆயிற்று ஆண்டுகள் ஒன்பது!

தந்தையாய் தள்ளி நின்று எம் சிந்தை கவர்ந்தவர்
வறுமையோ வளமையோ வெறும் நகைச்சுவையால்
களிப்பூட்டி வாழ்வை நிறைத்தவர்
நன்றாய்த் திட்டமிட்ட நண்பர்களின் அப்பாக்கள்
தரவியலாப் பலசெல்வம் எமக்களித்தார் மிகவெளிதாய்.

வியக்கின்றேன் அவர் மனப்பாங்கு, வழிகாண்பார் வாயினிலே
எவ்விதமாய்ப் பிரச்சினைகள் மலைபோலே வந்தாலும்
கயிற்றைக் கட்டி இழுத்துவிடு வந்தால் மலை போனால் கயிறென்பார்!

தம்சக்தி அறியாமல் தலைகொடுப்பார் பிறர்க்குதவ
தான்மட்டும் போதாதென்று பிறரையும் சேர்த்திழுப்பார்
முழுமுயற்சி கொடுத்திடுவார் இன்சொல்லால் ஊக்குவிப்பார்
பிறர் தன்சொல் கேட்கலையேல் நுனிமூக்கில் முழுக்கோபம்

காலையில் நண்பரானவர் மாலையில் வசவு பெறுவார்
மறுநாளே அவர் பாவமென்பார் உடனடியாய் உதவிசெய்வார்
கோபமும் குணமும் கூடிய இனியகலவை கோபாலதேசிகன்.

No comments: