யதார்த்த வாழ்க்கையில் உள்ள மனிதர்களின் குணசித்திரங்களை 3வரிக் கவிதைகளாக்க முயற்சித்திருக்கிறேன்
அம்மா
பக்கத்துவீட்டுப் பையனுக்கு அருமையாய்ப் படிப்பித்தாள்
ஏகமாய்ப் பாராட்டு; வீட்டில்
குழந்தைகளும் கணவரும் சாப்பிடாமல் தூங்கினர்.
பரிவோடு கவனித்தாள் நோயாளிகளை
கிடைத்தது திறமைக்கான விருது; வீட்டில்
வயதான மாமனாருக்கு தினமும் திட்டு
வாத்தியார்
பார்த்தவுடன் உணர்வார் மாணவனின் அறிவின்மை
தீர்வு தருவார் அடைவார் மாற்றம்; “என்ன எழவு டீ இது”
மனைவியிடம் கத்தினார், உள்ளே சர்க்கரை டப்பா காலி!
நாத்திகவாதி
கடவுளை மறக்கச்சொல்லி மயக்கவைக்கும் மேடைப்பேச்சில்
கைதட்டு வாங்கினார்; வீட்டில் அம்மையுடன் இருந்த மகனுக்காக
மாரியாத்தாளுக்கு வேப்பிலை அடித்துக்கொண்டிருந்தாள் மனைவி
வியாபாரி
கடையில் கரிசனமே உருவாய் கஸ்டமரைக் கவனித்தார்
வியாபாரத்தில் பெருவெற்றி; மனவளர்ச்சி குன்றிய
மகனை பள்ளியில் சேர்க்க பெரும்பாடு படுகிறாள் மனைவி
அப்பா
நண்பருக்கு பணம் முதலீடு செய்ய சரியான டிப்ஸ் கொடுத்துவிட்டு
அவசரமாய் வீடுதிரும்பியவரைக் கேட்டாள் பெரிய பெண்
“மாமா தரேன்னு சொன்ன கடனைக் கேட்க இன்னிக்கும் மறந்துட்டீங்களா?”
No comments:
Post a Comment