தங்கைக்கு வயது 33!
அகவை மூன்றுவரை அழுகைதான் உருவாம்
எனின் பத்தில் ஒன்றாய் ஆனந்தம் அளித்தவள் நீ!
அறிவிற்க்கும் திறனுக்கும் குறைவொன்றுமில்லை
இருப்பின் அகந்தையின்றி அன்பால் ஆர்வத்தால் சாதிப்பவள் நீ!
உருவாக்குவது உணவோ துணிமணியோ கலைப்பொருளோ
புதுமையாய் தன்னிச்சையாய் நிகரற்ற நேர்த்தியை வெளிப்படுத்தும் நீ!
வெற்றியும் தோல்வியும் ஒன்றேதான், நடந்ததா முக்கியம்
நடக்கப்போவது நன்றாவது தானே குறிக்கோளாய் வாழ்பவள் நீ!
வெற்றியென்பது நாம் நிர்ணயிப்பது, நம் மனதில் தான்
ஏட்டுச்சுரைக்காயா வாழ்க்கைப்பாடமா, தெளிவாய் விடையுணர்ந்தவள் நீ
சிரிப்பிற்கும் குறைவில்லை துள்ளிக் குதிப்பதும் அதிகமில்லை
வாழ்க்கையை சமச்சீராய் அணுகுதலை வளர்த்துக் கொண்டாய், ஆச்சரியம் நீ!
எத்தனையோ நற்குணங்கள் தடையின்றிக் கற்கும் திறன்
அன்பான பரிவாரம் அருமையாய்க் குழவிகள், நிறைவானவள் நீ
எமக்கொன்றும் குறையில்லை சொல்லத்தான் தோன்றுகிறது
உண்மையன்று! செல்ல வேண்டிய தூரங்கள் பல!!
வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment